BCF INDIA celebrates World Water Day 2021 by conducting an awareness campaign for young generations and common people across the globe through International Webinar by Dr. Julie Ladel, Team Leader and Key Expert of Integrated Water Resources Management (IWRM), France.
Youtube Live: https://youtu.be/RFNcZp4JegY
(18:00 - 19:30 IST)
You never know the worth of water until the well runs dry
CONSERVE WATER, CONSERVE LIFE
நீர் வளம் காப்போம்
உலக நீர் தினம்
மார்ச்- 22
"ஆழி சூழ் உலகு" என்பதற்கேற்ப நாம் வசிக்கும் பூமி மூன்றில் இரண்டு பங்கு தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. புவிப் பரப்பின் 70% பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது. புவியின் தண்ணீரில் பெரும்பகுதி சமுத்திரங்கள், ஏனைய பரந்த நீர்நிலைகளிலும், சுமார் 1.6% பகுதி நிலத்தடியிலும் காணப்படுகிறது. வளி மண்டலத்தில் நீர் 0.001% பகுதி வாயு வடிவிலும் மேகங்களிலும் காணப்படுகிறது. நிலத்தின் மேல் உள்ள நீரில் 97% பகுதி சமுத்திரங்களிலும், 2.4% பனி ஆறுகள் மற்றும் துருவ பகுதிகளிலும் 0.6% பகுதி நீர் நிலைகளான ஆறுகள், ஏரிகள், குளம் குட்டைகளிலும் காணப்படுகிறது. உலகின் மொத்த நீர் தேவையில் 20% நிலத்தடியிலிருந்தும் 20% ஆறுகளிலிருந்தும் எடுக்கப்படுகிறது.
மனிதர்களுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் தூய்மையான குடிநீர் இன்றியமையாதது. உயிருள்ள அனைத்து ஜீவன்களின் இயக்கத்துக்கு ஆதாரம் நீர். உயிரற்ற ஜடங்களின் தூய்மை பேண உதவுவது நீர். நீரின்றி உலகமே இல்லை. எல்லா வளங்களுக்கும் மூலவளம் நீரே ஆகும். உலக மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த உன்னத பொக்கிசமே நீர். நீர் வளமானது சகல உயிரினங்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவையாகும். நீர் உயிரின் ஆதாரம். உயிர்களனைத்துக்கும் அதுவே ஜீவாதாரம். நீர் இல்லை என்றால் இந்த உலகிலும் உயிருள்ள ஜீவன்கள் இருக்காது. உணவு இல்லை என்றால் அதனை உற்பத்தி செய்து கொள்ளலாம். உடை தான் இல்லை என்றாலும் அதனையும் உற்பத்தி செய்து கொள்ளலாம். ஆனால் நீர் இல்லாது போய் விட்டால் அதனை எந்த ஒரு சக்தியாலும் உற்பத்தி செய்யவே முடியாது.
இந்த நீரினை பயன்படுத்துவோர்களிடையே தேவைகள் மேலும் மேலும் அதிகரிப்பதனால் இன்று நீர் போட்டிப் பொருளாகவும், சந்தைப் பொருளாகவும் மாறிவிட்டது.
உலக அளவில் பார்க்கும்போது நீரை அதிகமாகப் பயன்படுத்தும் துறை விவசாயமாகும். 85 சதவீதம் நீர் விவசாயத்துக்காக பயன்படுத்தப்படுகின்றது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, குறைவாக உள்ள நீர் வளத்தை மக்கள் தற்போது எவ்வாறு பயன்படுத்துகிறரர்கள் என்பதைப் பொறுத்தே எதிர்கால மக்களின் வாழ்வு அமையுமென குறிப்பிடப்படுகின்றது.
பூமியெனும் உயிரின வாழ்விடத்தைத் தவிர வேறு எந்தக் கோள்களிலும் நீரில்லை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அங்கெல்லாம் உயிரினம் இல்லை என கூறப்படுகின்றது. வேற்றுக் கிரகங்களில் மரம் செடி கொடி, ஆறு, குளம், ஓடைகளும் இல்லை. இதன் காரணமாகவே அந்தக் கிரகங்களில் உயிரினங்கள் இல்லையென இதுவரை கண்டுபிடிப்புக்கள் நிரூபித்துள்ளன. எனவே பூமிக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது என ஆனித்தரமாக கூறலாம்.
குறைந்துவரும் நீர்வளம்
உலகில் ஏராளமாக நீர் இருப்பினும், 40% மக்கள் நீர்பற்றாகுறை உள்ள பகுதிகளிலேயே வசித்து வருகின்றனர். இது 2025ல் சுமார் 48 சதவீதமாக உயரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025 ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானோர் நீரை அடிப்படையாகக் கொண்ட பலவீனங்களுக்கு உட்படுத்தப்படுவர் என சில பார்வையாளர்கள் கணித்துள்ளனர். ஐ.நா. மக்கள்தொகை நிதி அமைப்பின் கருத்துப்படி 2050-ல் சுமார் 4.2 பில்லியன் மக்கள் தங்கள் தினசரி குறைந்தபட்ச தேவைகளான குடிப்பது, குளிப்பது மற்றும் சுத்தம் செய்வதற்காக 50 லிட்டர் நீர் கூட கிடைக்காத நிலைக்கு தள்ளப்படுவர் என அஞ்சப்படுகிறது.
பன்மடங்கு பெருகிவரும் மக்கள்தொகை, விவசாயத்துறை மற்றும் தொழிற்துறையில் அதிகரித்து வரும் மாற்றம் மற்றும் முன்னேற்றத்தால் உலகின் நீர் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் நகரம் மற்றும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை இரசாயன உரங்களின் பயன்பாடு ஆகியவை 70% நன்னீரை மாசுபடுத்திவிடுகின்றன. பூமியின் நிலப்பரப்பில் 70 சதவீதம் நீர் இருப்பினும் உலக மக்கள் தொகையில் ஒவ்வொரு நான்கு பேரிலும் மூவர் அருந்துவதற்கு தூய நீரின்றி அவதிப்படுகின்றனர்.
உலகில் பாதுகாப்பான நீரின்றி 8 நொடிகளுக்கு ஒரு குழந்தை என்ற விகிதத்தில் மரணம் நிகழ்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு வருடமும் உலகில் ஒரு கோடியே 50 இலட்சம் குழந்தைகள் இறப்பதற்கு பாதுகாப்பற்ற குடிநீர் முதல் காரணமாக அமைகிறது. நீர் தொடர்பான நோய்களினால் இறப்பவர்களின் எண்ணிக்கை வருடாவருடம் அதிகரித்துக் கொண்டே போகிறது.
உலகிலேயே முதன்முறையாக ஒரு பெரு நகரம் முற்றிலும்... முற்றிலும் என்றால் எதுவுமே இல்லாமல்... கொஞ்சம் கூட இல்லாமல்... சில சொட்டுக் கூட இல்லாமல் முற்றிலுமாக தண்ணீரில்லா நிலைக்குப் போகப்போகிறது. மிக விரைவில் எட்டப்படவிருக்கும் இந்த நாளை ஆங்கிலத்தில் "டே ஜீரோ" (Day Zero) என்று சொல்கிறார்கள். இந்த நாளை விரைவில் எட்டிவிடும் தென்னாப்பிரிக்காவின் கடற்கரை நகரமான கேப்டவுன்.
சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு சர்வதேச ஆராய்ச்சி இப்படியாகச் சொல்கிறது..
"இந்த சர்வதேச சமூகம், உலக வெப்பத்தை பாரீஸ் ஒப்பந்தத்தின் படி 2 டிகிரி செல்சியஸைக் கடக்காத வகையில் பாதுகாத்தாலும் கூட... இதுவரை ஏற்படுத்திய காயங்களுக்கான கேடுகளைச் சந்திக்கத்தான் வேண்டியிருக்கும். இதுவரை நாம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளின் காரணமாக இந்த பூமியின் கால்பங்கு பகுதியாவது கடும் வறட்சிக்குத் தள்ளப்படும்" என்று சொல்லியிருக்கிறது.
கேப்டவுனின் வறட்சி தண்ணீர் பிரச்னை மட்டுமே அல்ல. அது சமூகப் பொருளாதாரப் பிரச்னை. சர்வதேச பிரச்னை. உணவுப் பஞ்ச பிரச்னை. இந்த பூமியின் பிரச்னை.
நமக்கு என்ன இதனால்? நமக்குதான் இன்று குடிக்க தண்ணீர் இருக்கிறதே? என்று நிம்மதி பெருமூச்சு விடுபவர்களுக்கு வரும் நாட்களில் பெரும் அபாயமணியை அடிக்கிறது இந்த கேப்டவுன் சூழல்.
நீர்ப் பற்றாக்குறையும் புவி வெப்பமயமாதலும் மனித குலம் இன்று எதிர்கொண்டிருக்கும் பேராபத்துக்களாகும். இவ்விரு பேராபத்துக்களையும் சமாளிப்பதற்கு உலக நாடுகள் தங்களை எந்தளவுக்கு தயார்படுத்தியிருக்கின்றன என்பதை நோக்கும் போது வேதனையே மிச்சமாகிறது.
எனவே நீர் சேமிப்புக்கு நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் நம் வாழ்நாளில் சில மணிநேரங்களை அதிகரித்துக் கொண்டே செல்கிறோம். உணவில்லாமல் ஒரு வாரம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது. எனவே, நீர் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உலகம் வெப்பமயமாவதையும் குறைக்க முடியும். இன்றைய பெருகிவரும் மக்கள்தொகையில் நீர் சேமிப்பு முறைகளை ஒவ்வொரு விநாடியும் கடைப்பிடிக்க வேண்டிய நிலையில் அனைவருமே உள்ளோம்.
உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில், தண்ணீரை மாசு படுத்தாமல், 'உயிர்போல் காப்போம்' என்ற உறுதி மொழியை மனதில் ஏற்று அதனை நிறைவேற்ற பாடுபடுவோம்.
Comentários